கரு உருவாகுதல் மற்றும் கரு வளர்ச்சி


மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள் (தரிசாய்க் கிடக்கும்) வறண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது. அல்குர்ஆன் 22:5

பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். அல்குர்ஆன் 23:14

இவ்வசனத்தில் கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகளைக் கூறி வரும் பொழுது “பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம்” என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

இது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார் இரண்டு மூன்று மாதங்கள் அவற்றுக்கான வடிவத்தை பெறுவதில்லை. வெறும் சதைப் பிண்டமாகவே வளரும். பிறகு தான் ஒவ்வொரு உறுப்புகளும் எங்கெங்கே அமைய வேண்டுமோ அங்கே அதற்கான செல்கள் நகர்ந்து வடிவம் உருவாகும்.

இதைத் தான் “பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம்” என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

ஆது சமுதாயத்தினரும் ஹூது நபியும்


ஹூது நபியின் கூட்டத்தார்களான ஆது சமுதயாத்தினர் வாழ்ந்திருந்த இடம்தான் உபார் ஆகும். இது ஓமான் நாட்டில் உள்ள சலாலாஹ் என்ற நகரத்திலிருந்து 172 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இது கி.பி. 1992ல் நடைபெற்ற புதைபொருள் ஆராய்ச்சியின் போது கண்டுபடிக்கப்பட்டது.

திருக்குர்ஆன் அத்தியாயம் 11:50 ல் அல்லாஹ் கூறுகிறான்.

“ஆது” சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை. 

மேலும் திருக்குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்

உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள், அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை. அல்குர்ஆன் 89:6-8 

சிலைகளை வணங்கி கொண்டிருந்த ஆது சமுதாயத்தினரிடம் அல்லாஹ் வழங்கும் தண்டனைகளைப் பற்றி ஹூது நபி முன்னெச்சரிக்கை செய்தார். ஆனால் அவர்களோ அதையும் மறுத்து புறக்கணித்தனர். ஹூது நபியையும் உண்மையான விசுவாசிகளையும் பாதுகாத்து அல்லாஹ் நிராகரிப்போரை அழித்தான்.

இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர். அல்குர்ஆன் 69:6-7

இப்பொழுது உபாரை சுற்றிலும் யாருமற்ற பாலைவனம் தான் உள்ளது

இப்ராஹீம் அலைஹி வஸ்ஸலாம்


இராக்கில் உள்ள அன்நஸிரியா நகரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பாபிலோனியாவில் உள்ள உர் என்று அழைக்கப்படுகின்ற நகரம் தான் இபுறாகிம் நபி பிறந்த நகரமாகும். 

A=இப்ராஹீம் நபி அவர்களின் வீடு என்று நம்பப்படுகிறது.
B=நம்புருது மன்னன் சந்திரனுக்கு கட்டிய கோயில்.
C=இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் 
அவர்களின் அடக்கஸ்தலம் ஹெப்ரான் நகரத்தில் உள்ள அல்ஹலீல் என்ற இந்த பள்ளிவாசல் அருகில்தான் உள்ளது.
D=நம்ருது மன்னனின் அரண்மனையின் அஸ்திவாரம்

இப்ராஹீம் நபியின் சமுகத்தினர் அவ்வூரை சந்திர தேவன் காத்து வருவதாக நம்பினர். அவ்வூரில் சந்திரனுக்கு ஒரு கோயில் கட்டினான் நம்புருது மன்னன்.

பிற்காலத்தில் அக்கோயிலை மக்கள் புதுபித்தார்கள். சுமார் ஜயாயிரம் தேவர்களையும் தேவிகளையும் சிலை வடிவில் வணங்கிக் கொண்டிருந்த தன் சமுதாயத்தினர், தம் தந்தை மற்றும் நம்ருது மன்னனிடமும் சிலை வணக்கத்தின் பகுத்தறிவுக்கு பொருத்தமில்லாத நிலைகளை எடுத்து கூறினார்.

சுமார் 38 மீட்டர் நீளமும் 38 மீட்டர் அகலமும் உள்ள நம்ருது மன்னனின் அரண்மனையில் ஏறக்குறைய 30 அறைகள் இருந்தன.

சிலைகள் உயிரற்றவை என்பதை நிரூபிப்பதற்க்கு இப்ராஹீம் நபி ஒரு தந்திரம் செய்தார்கள். சிறிய சிலைகள் எல்லாவற்றையும் கோடாரியால் உடைத்துவிட்டு கோடாரியை பெரிய சிலையின் கழுத்தில் தொங்கவிட்டார். இதனால் கோபமுற்ற அவரது சமுதாயத்தினர் அவரை நெருப்பில் தள்ளி கொலை செய்ய முடிவெடுத்தனர். அல்லாஹ்வை மட்டும் தான் வணங்க வேண்டும் என்ற உண்மையை கூறிய இப்ராஹீம் நெருப்பு குண்டத்தில் தூக்கியெறியப்பட்டார். ஆனால் எல்லாவற்றையும் எரிக்கும் நெருப்புக்கு அந்த ஆற்றல் இல்லாமல் போகும்படி அல்லாஹ் ஆனையிட்டான்.

(இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம். அல்குர்ஆன் 21:69

இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் தன் நாட்டையும் வீட்டையும் விட்டு ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாலஸ்தீனத்தை அடைந்தார்.


இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் முதுமை காலத்தில் அவர்களுக்கு ஒரு மகன் பிறக்கிறார். அந்த மகனையும் மனைவி ஹாஜராவையும் பாலஸ்தீனத்தில் இருந்து ஏறத்தாழ 1500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரேபியாவில் ஆள் நடமாட்டமில்லாத மக்காவில் விட்டுவிட்டு திரும்பி வரும்படி அல்லாஹ் கட்டளையிட்டான். வறட்சிமிக்க அரேபியாவின் பள்ளத்தாக்குகளில் அதிர்ச்சியோடு சஃபா மர்வா குன்றுகளுக்கிடையில் தண்ணீரைத்தேடி இங்கும் அங்கும் ஹாஜரா அழைந்தார். இந்த வரலாற்று உணர்வை நிலை நாட்ட இன்றும் ஹஜ் மற்றும் உம்ரா செய்பவர்கள் சஃபா மர்வா குன்றுகளுக்கிடையில் வேகமாக நடந்து வருவார்கள். வறட்சிமிக்க மக்காவில் விடப்பட்ட கைக் குழந்தை தாகத்தால் கால்களை உதைத்து அழுதபோது அவ்விடத்தில் ஜம்ஜம் என்ற நீருற்று பீறிட்டு கிளம்பியது. இந்த நீருற்று நாலாயிரம் வருடங்களுக்கு பிறகும் வற்றாமல் மக்காவாசிகளுக்கும் மக்காவுக்குவரும் ஹாஜிகளுக்கு ஏற்படுத்திய பெரும் அருட்கொடையாகும்.

இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் பாலைவனத்தில் விட்டு சென்ற கைக்குழந்தை வளர்ந்து நடக்கும் பருவத்தை அடைந்ததும் அவர்களது கைகளால் அக்குழந்தையை அறுத்து பலியிடுமாறு இறைவன் கட்டளையிட்டான். இதனை நிறைவேற்றுவதற்க்கு இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் பாலஸ்தீனத்திலிருந்து மீண்டும் மக்கா வந்தார். மகனுடன் மினாவிற்க்கு புறப்பட்ட இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் இந்த இடத்திற்க்கு வந்து சேர்ந்து வந்தவுடன் ஷைத்தான் அசரிரியாக இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களை திசைதிருப்ப முயற்சி செய்தான். அந்த அசரிரியின் ஒசை கேட்ட திசை நோக்கி இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் கல்லால் அடித்தார்கள். எம்பெருமானர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் கட்டளைக்கு இணங்க செய்யக்கூடிய ஹஜ்ஜில் அதே இடத்தில் ஹாஜிகள் கல்லால் அடிப்பார்கள். ஷைத்தான் அடிக்கும் கற்கள் இந்த வட்டத்திற்க்குள் விழுந்தால் போதுமானது. அந்த தூணில் படவேண்டிய அவசியமில்லை

இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் தன் மகனை அறுப்பதற்க்காக தரையில் படுக்க வைக்கிறார்கள் அப்பொழுது இறைவன் கூறினான்: வேண்டாம் இப்றாஹீம் நீ என் கட்டளையை நிறைவேற்றிவிட்டாய். உம்மகனுக்கு பதிலாக ஒரு ஆட்டை அறுப்பாயாக. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்க்காக எதையும் தியாகம் செய்யக்கூடிய மனப்பான்மையை உருவாக்குதுதான் இந்த திருப்பலியின் நோக்கமாகும்

இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் மகன் இஸ்மாயில் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் வாலிப வயதை அடைந்ததும் அவர்கள் இருவருக்கும் கஃபாவை அதன் பழமையான அஸ்திவாரத்திலிருந்து எழுப்பும்படி அல்லாஹ் கட்டளையிட்டான்.
இந்த இறையில்லத்தை 7 முறை இடப்புறமாக சுற்றி வலம்வருவது ஹஜ்ஜிலும் உம்ராவிலும் கடமையான செயலாகும்.

ஜனாஸா தொழுகை

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்....

அவர்களுக்காக .....

1.முதல் தக்பீருக்குப் பின்,
_____________________________

முதல் தக்பீர் கூறிய பின் ....

அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்திஹா ) ஓத வேண்டும்.

ஆதாரம்:- புகாரி, 1335

2.இரண்டாம் தக்பீருக்கு பின்,
_______________________________

இரண்டாம் தக்பீர் கூறிய பின் ......
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும்

”அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.

ஆதார நூல்:- பைஹகி ,4/39

3,4 .மூன்றாவது மற்றும் நான்காவது தக்பீருக்கு பின்....
_________________________________

இறந்தவரின் பாவமன்னிப்புக்காகவும், மறுமை நன்மைக்காகவும் துஆச் செய்ய வேண்டும். ஜனாஸா தொழுகையின் போது நபி(ஸல்) அவர்கள் பல்வேறு துஆக்களை கேட்டுள்ளார்கள். அவற்றில் இயன்றதை நாம் ஓதிக் கொள்ளலாம்.

அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு வஆஃபிஹி வஃபு அன்ஹு வஅக்ரிம் நுஸுலஹு வவஸ்ஸிஃ முத்கலஹு வக்ஸில்ஹு பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத் அப்யளு மினத் தனஸ் வஅப்தில்ஹு தாரன் ஃகைரன் மின் தாரிஹி வஅஹ்லன் ஃகைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் ஃகைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்கில்ஹுல் ஜன்ன(த்)த வஅயித்ஹு மின் அதாபில் கப்ர் வமின் அதாபின்னார்

அறிவிப்பவர்:- அவ்ஃப் பின் மாலிக்(ரலி)
முஸ்லிம்: 1601

பொருள்: இறைவா..!

இவரை மன்னித்து அருள் புரிவாயாக..!

இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..!

இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!

இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக..!

பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!

அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..!

கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!